திங்கள், செப்டம்பர் 27, 2010

இஸ்லாம் - Revised Version தேவையா?

14 கருத்துகள் :


இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களும், அவதூறுகளும்,நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாய் முஸ்லீம்களை வியாபித்துக் கொண்டே இருக்க.பெருவாரியான விமர்சனங்கள்,ஒரு கேள்வியை முன்வைத்தே எழுகின்றன.அது

"ஏன் குர்ஆனில் மாற்றம் செய்யக் கூடாது ? தேவையற்ற வசனங்களை நீக்கக் கூடாது ? - என்று"

பொதுவாக பிற மதத்தவருக்கு,குறிப்பாக ஹிந்துக்களுக்கு,இஸ்லாம் மீது பல்வேறு விமர்சனங்களும்,கேள்விகளும்,தவறான புரிதலும் உண்டு.

அவற்றை ஒரு ஹிந்துவாக இருந்து சிந்திக்கும் ஒரு மனிதனுக்கு,ஏன் இந்த குர் ஆனில் மாற்றம் கொண்டுவந்தால் என்ன? (revised version) அதில் தங்களுக்கு சாதகமான கருத்துக்களை வைத்துக் கொண்டு,மற்றதை நீக்கினால் என்ன? என்றதொரு பிரதான கேள்வி எழுகிறது.

வியாழன், செப்டம்பர் 09, 2010

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை :


பன்னிரு திங்கள் நெறிகாண
ஒற்றை திங்கள் ரமலானில்
முப்பது நாட்கள் நோன்பிருந்து
பசிகள் பலதுடன் போர் புரிந்து



வல்லோன் வகுத்த கடமைகளை
வாஞ்சை மேவி நிறைவேற்ற
உணவும் நீரும் உடனிருந்தும்
பசியும் தாகமும் கை கொண்டோம்

Counter

பிற பதிவுகள்