திங்கள், நவம்பர் 29, 2010

இஸ்லாமிய பெண்ணியம்

11 கருத்துகள் :
தீன் கூறும் பெண்மணியே...

தடைகள் பல மலைகளாய்...

மார்க்கத்தின் பேர் சொல்லி
உனை படிதாண்டா பதுமையாக்க
உடல்கூறு தனை சொல்லி
உன் உள்ளமதின் பலம் நீக்க
குடும்பத்தின் நிலை சொல்லி
உனை வீட்டோடு முடமாக்க
கயவர்களின் கதை சொல்லி
உன் விழியிரண்டை குளமாக்க

ஞாயிறு, நவம்பர் 28, 2010

தாயகம் முதல் அமீரகம் வரை

11 கருத்துகள் :


கூடிய உறவின்
வாடிய முகம் கண்டு,
விழிதனில் மகிழ்வின்றி
விடைதர மொழியின்றி
நடந்திட வழியின்றி
நான் வரும் நேரம்


காத்திருக்கும் காதலிபோல்
ஓடுதளத்தில் நின்றிருந்தாய்...
வரமறுக்கும் காலிரண்டை
கம்பளமிட்டு வரவேற்றாய்...


பிரிவின் வேதனை அனல் கூட்ட,
குளிரூட்டிதனை கொண்டு
கனல் தணிக்க முற்பட்டாய்

புதன், நவம்பர் 24, 2010

ஃபத்வாவுக்கு கண்டனம்

5 கருத்துகள் :

இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட,பிரபலமாக ஃபத்வாக்களை வழங்கி வரும் தாருல் உலூம் தியோபாண்ட் மதரஸா இன்று ஒரு செய்தியை தனது ஃபத்வா பிரிவில் வெளியிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை அந்த மதரஸாவின் தளத்திற்கு சென்று சரிபார்த்தாகிவிட்டது.மூன்று ஃபத்வாக்களில் இரத்ததானம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

(Fatwa: 1166/957=L/1430) - இந்த ஃபத்வாவில்,இரத்ததானம் செய்யக்கூடாது எனவும்,ஆனால் ஒருவர் தனது உறவினரை காப்பாற்ற இரத்ததானம் கட்டாயத்தின் பேரில் வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Fatwa: 2145/3580=B/1429) - இரண்டாவதாக இந்த ஃபத்வாவில்,ஒருவர் எதிர்பாரா தேவைக்கும்,கட்டாயத்தேவைக்கும் இரத்ததானம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

(Fatwa: 1496/1496/M=1431) - மூன்றாவதாக, இந்த ஃபத்வாவானது,நோன்பு காலங்களில் இரத்தம் வெளியேறுவது நோன்பை முறிக்குமா என்ற கேள்விக்கு,பதிலாக,அது நோன்பை முறிக்காது என கூறிவிட்டு.இரத்ததானம்,தேவையும் கட்டாயமும் இருக்கும் போது மட்டும் தரலாம் எனக்குறிப்பிடுகிறது.

இம்மூன்று பத்வாக்களும் ஒன்றுடன் ஒன்று சற்றே முரன்படுகிறது.மற்றும் அனுமதித்த ஒன்றை அனுமதிக்கப் படவில்லை என சொல்லிவிட்டு,அவசியத்திற்கு அனுமதி,என்பது அறிவார்ந்த பத்வாவாக இல்லை.

லிவ்விங் டு கெதர் = விபச்சாரம்

23 கருத்துகள் :
லிவிங் டு கெதர்:

இது குறித்து பரவலாகவே,பதிவர்கள் ஆதரவாகவும்,எதிராகவும், தங்களது கருத்துக்களை பதிந்து வர.நானும்,என் பங்குக்கு,எனது கருத்தையும் சொல்லிவிடலாம் என முடிவெடுத்துவிட்டேன்.

லிவ்விங் டு கெதர்.அதாவது.ஆண் பெண் இருவரும் திருமணம் இன்றி,ஒன்றாக வாழ்வது.பிடித்து இருந்தால் சேர்ந்து வாழ்க்கை தொடரும்,இல்லை என்றால்,அவர் அவர் வழியை அவரவர் பார்த்துக் கொண்டு சென்றுவிடுவது.பிறகு,திரும்பவும் அவரவர் விரும்பியவருடன் வாழ்வை ஆரம்பித்துவிடுவது.

சற்றே இவ்விடயத்தை சிந்தித்தால்,இது விலங்குகளின் வாழ்வு முறையை ஒத்து காணப்படும். இதில் பல விலங்குகள் கூட ஒரு துணையுடன் வாழும் பண்புடையதாக இருக்கிறது.

மனிதனுக்கும்,விலங்குகளுக்கும்,அடிப்படையில் வேறுபாடு காணப்படுவது பகுத்தறிவு எனும் மேலான சிந்தனைத்திறனால்.அது தவிர்த்தும்வெட்க உணர்வு,பேச்சு,உறவுகள்,வாழ்க்கை முறை, என பல விடயங்களில் நாம் அவைகளில் இருந்து வேறுபடுகிறோம்.

சனி, நவம்பர் 20, 2010

வெறுப்புணர்ச்சி - ஜிஹாத் - பகுதி 2

11 கருத்துகள் :

இன்று உலகில் இஸ்லாமிய பெயர்தாங்கிகளால் முன்னிருத்தப்படும் அத்துனை வன்முறைகளும் ஜிஹாத்,என்ற டைட்டில் இல்லாமல் செய்யப்படுவதில்லை.இதுவல்லாது இஸ்லாமியர்களால் செய்யப்படும்,வேறுசில வன்முறைகளுக்கும்,தாராளமாக ஊடகங்கள் ஜிஹாத் என்ற லேபிள் ஒட்டியே மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

ஜிஹாத் குறித்து பிறமத சகோதரர்களின் தெளிவு எப்படிப்பட்டதெனில்......
ஜிஹாத் என்றால் என்ன?புனிதப்போர்...யார் செய்வது? இஸ்லாமியர்கள்.., கொல்லப்படுவது? அப்பாவி மக்கள்.....so இஸ்லாமிய புனிதப்போர்கள் அனைத்தும் அப்பாவி மக்களை கொல்லவதே. 
இது மட்டுமே ஜிஹாத் குறித்து பிற மக்கள் கொண்டுள்ள அபிப்ராயம்.அவர்களுக்கு இது போதுமானது.மேலும் இது குறித்த உண்மை நிலையை யாரும்,அவர்களிடம் கொண்டு சேர்க்காதிருக்க,இஸ்லாமிய எதிரிகளின் பிரச்சாரத்தை மட்டுமே எதிர்கொண்ட மக்களின் மனநிலை அதுவாக இருப்பதை குற்றப்படுத்த இயலாது.

சரி: ஜிஹாத் என்றால் என்ன? 

சனி, நவம்பர் 13, 2010

அரவிந்தன் நீலகண்டன்களுக்கு சில கேள்விகள்!

4 கருத்துகள் :
சமீபத்தில் ஹிந்து(த்துவா)க்களால் மிகவும் வரவேற்கப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் உண்மையான கரசேவை என்ற "கட்டு"ரையை படிக்க நேர்ந்தது.

தீர்ப்புக்கு முன்னரே அவர்களது சேவைகளை சரியெனச் சொல்லிவந்தாலும்,அதுவரை யாரும் பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக நியாயப்படுத்தவில்லை.

அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு,அவர்களுக்கு சாதகமானதை தொடர்ந்து,அவர்களது வன்ம வார்த்தைகள் அந்த கருமம் பிடித்த சேவையால் இந்திய தேசத்திற்கு நிகழ்த்தப்பட்ட மாபெறும் அவமானத்தை நியாயப்படுத்த துவங்கி விட்டார்கள்.

இதோ.இந்திய தேச இஸ்லாமியர்களின் இரத்தத்தில் துவைத்து வண்ணமேற்றிய காவிக்கொடியுடன் நாடெங்கும் ர(த்)த யாத்திரை கொண்டு,மாபெறும் இன அழிப்பை நிகழ்த்திய அத்வானி,இத்தீர்ப்பிற்கு பிறகு "தனது யாத்திரை சரியாது தான்"என திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

இதே தான் அரவிந்தனின் நிலைப்பாடும்.அத்வானி ஆயிரம் தலைவாங்கிய ரதயாத்திரையை நியாயப்படுத்துகிறார்.அரவிந்தன்,அதன் பின் நடந்த தேச அவமானமான மஸ்ஜித் இடிப்பை நியாயப்படுத்துகிறார்.

Counter

பிற பதிவுகள்