புதன், ஜூன் 06, 2012

மரணிக்கவிருப்போர் கவனத்திற்கு !!!! - 02



பின்னர் அவ்விருவரும் : நீ சுவர்க்க வாசியாக இருந்தால், கூடவே நாங்களும் இருப்போம், எங்களை நீ பார்ப்பீர்,
நான்: நான் பார்த்தும் செவியுற்றும் இன்னுமா நான் சுவர்க்கத்தில் நுழைவதில் சந்தேகம் உள்ளது என்றேன்
அவ்விருவர் : நீ சுவர்க்கத்தில் நுழைவது என்பது பற்றி அல்லாஹ் மாத்திரமே அதற்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறான், இம்மரியாதை நீ முஸ்லிமாக மரணித்ததன் காரணமாகத்தான் இன்னும் உன்னுடைய அமல்கள் மற்றும் தராசுப் போன்றவைகள் சமர்க்கிப்பட வேண்டியிருக்கிறது  என்றவுடன் என் முகம் மாறி அழ ஆரம்பித்து விட்டேன் ஏனெனில் மலை போல் உள்ள பாவங்கள் என் ஞாபகத்தில் வர ஆரம்பித்து விட்டன.

அவ்விருவர் என்னிடம் : அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள் மேலும் உன் ரப் எவர் மீதும் அநீதியிழைக்கமாட்டான் என நம்பு என சொல்லி விட்டு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்லியவாறு மேலே உயர்ந்து விட்டனர்.
நான் எனது உடலை நீட்டிவிடபட்ட நிலையில் பார்த்தேன், எனது முகத்தை என் பார்வைகள் உயர்ந்த நிலையில் பார்த்தேன், பின்னர் அழும் சப்தத்தை செவியுற்று திசை திரும்பினேன் : அது என் அன்பு மகனின் ஓசை, அவனுடன் என் தம்பியும் இருக்கிறார்,
சுப்ஹானல்லாஹ் : நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்என் உடலைப்பார்க்கிறேன், அதில் தண்ணீர் ஊற்றப்படுகிறது உடனே நான் குளிப்பாட்டப்படுவதாக அறிந்து கொண்டேன், அழும் சப்தம் என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, மிகவும் நெருக்கடி கடுமையாகி விட்டது இருப்பினும் ''அல்லாஹ் உன் இடத்தை நிரப்புவானாக! அல்லாஹ் உனக்கு ரஹ்மத் செய்வானாக! என என் தந்தை சொன்னது  என் மீது குளிர்ந்த தண்ணீர் ஊற்றியது போல இருந்தது பின்னர் என் உடலை வெள்ளைத் துணியால் சுருட்டினார்கள்.

என் மனதில் சொல்லிக் கொண்டேன் : அல்லாஹ்வே! நான் என் உடலை அல்லாஹ்வின் பாதையில் சமர்ப்பித்து நான் ஒரு ஷஹீதாக இறந்திருக்கலாமே! என்றும், அல்லாஹ்வின் ஞாபகத்திலே அல்லது தொழுகையிலே அல்லது வணக்க வழிபாட்டிலேயே எல்லா நேரத்தையும் கழித்திருக்கலாமே என்றும், இரவு பகலாக நான் பல தருமங்கள் செய்திருக்கலாமே என்றும் பலவாராக எண்ண ஆரம்பித்துவிட்டேன், என் கவலையெல்லாம் கப்ரில் என்ன நடக்கப் போகிறதோ என்பதைபற்றித்தான்.
குளிப்பாட்டுபவர் : அஸருக்குப்பின் தொழ வைக்கப்போகிறீர்களா? என விசாரிப்பதை நான் செவியுறுகிறேன்

என் தந்தை : அழுது கொண்டே இன்ஷா அல்லாஹ் என சொன்னார்கள், என் உடலை குளிப்பாட்டிவிட்டு எடுத்து  செல்கின்றனர், என் உடலைப் பார்க்கிறேன், ஒதுங்கி விடவோ அல்லது உள்ளே நுழைந்து விடவோ என்னால் முடியவில்லை, ஆச்சர்யமான திகைப்பில் ஆக்கக் கூடிய விஷயம், என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு இடத்தில் என்னை நுழைத்து விட்டனர் ஆனால் அது மய்யித்கள் வைக்கக்கூடிய ஐஸ் பெட்டி என்பதை உணர்ந்தேன், எனக்கு என்ன நடக்கப் போகிறது என்று நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன்.
மிகப்பெரிய சப்தம், வந்து தூக்குங்கள் என சொல்வது என் சிந்தனையை முறித்து விட்டது, என்னை உயர்த்தித் தூக்கினார்கள்;, அவர்களின் அழும் சப்தத்தை செவியுற்றுக் கொண்டே இருக்கிறேன், என் தந்தையின் அழும் ஓசை என்னை மிகவும் தர்மசங்கடத்தில் ஆக்கியது, என் தந்தையே! கவலைப்படாதீர்கள் அல்லாஹ்விடம் எதுவுள்ளதோ அதுவே மிக சிறந்தது, தந்தை அவர்களே! நீங்கள் என்னை விரும்புகிறீர்கள், எனக்காக அழாதீர்கள், சத்தியமாக இது என் மனதை புண்படுத்துகிறது, எனக்காக துஆ செய்யுங்கள், இதுவே எனக்குத் தேவை என சொல்லலாம் என நான் ஆசைப்பட்டேன், நான் பல ஓசைகளைக் கேட்கிறேன், என் சகோதரர்களின் ஓசையையும் அவர்கள் அழுவதையும், அதைப்போலவே என் சாச்சா பிள்ளைகளின் ஓசையையும் பிரித்துணர முடிந்தது,   என் நண்பர்களில் ஒருவர் : அல்லாஹ் அவரை மன்னிக்கட்டும், அல்லாஹ் அவர் மீது இரக்கப்படட்டும் என சொல்ல வேண்டுமென பிறருக்கும் அறிவூட்டியது தாகித்தவனுக்கு குளிர்ந்த நீர் கொடுத்தது போன்று இருந்தது.

பள்ளியில் தொழ என்னை இறக்கிவைத்துவிட்டு அவர்கள் தொழும் சப்தத்தை நான் செவியுறுகிறேன், நான் அவர்களோடு தொழ வேண்டும் என ஆசைப்பட்டேன், நீங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் உங்களின் நன்மைகள் அதிகரிக்கின்ற உலகில் இருக்கிறீர்கள், நானோ எல்லா அமல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன என நானே சொல்லிக்கொண்டேன்.
மக்கள் தொழ தயாரான பின்னர் முஅத்தின் (மோதினார்) ஒரு ஆண் மையித்திற்காக தொழவைக்கப்படுகிறது, அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக! என்றார், இமாம் தொழவைக்க நெருங்கி தொழுகையும் ஆரம்பித்து விட்டது, தொழுகையின் இடையில், மலக்குகளின் கூட்டம், தொழுகையாளிகளின் எண்ணிக்கையைப்பற்றியும், இதில் எத்தனை பேர் இணைவைக்காமல் ஒரே இறைவனை ஏற்றவர்கள் என்பது பற்றியும் ஒருவர் மற்றொருவருடன் விசாரித்துக் கொள்கின்றனர்,
மூன்றாவது தக்பீர், இதிலேதான் எனக்காக துஆ செய்யும் முறை வருகிறது, வானவர்கள் பல விஷயங்களை எழுதினார்கள் உடனே இவர்கள் மக்களின் துஆவை கணக்கிடுகிறார்கள் என தெரிந்து கொண்டேன், யா அல்லாஹ்! இமாம் இந்த தக்பீரை கொஞ்சம் நீட்டியிருந்தால் நன்றாக இருக்குமே! என ஆசைப்பட்டேன் ஏனெனில் ஒரு வித மன அமைதி, மகிழ்ச்சி, நற்பாக்கியம் மற்றும் ஒரு ஆச்சர்யத்தைப் பார்;த்தேன்,பின்னர் நான்காவது தக்பீர் சொல்லி சலாம் கொடுத்து விட்டார்.
என்னை கப்ரை நோக்கி தூக்கிச் சென்றார்கள், அங்கு பல ஆச்சரியங்களும் பல திகில்களும் இருந்தன.

மூன்றாவது பகுதி 

கப்ரில் இரண்டு வானவர்களை சந்திப்பது மற்றும் தனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவது.
என்னை விரைவாக கப்ரை நோக்கி எடுத்துச் சென்றனர், சிலர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என சொல்லி அழுதவாறே வருவதும் என் காதில் விழுகிறது,
இந்த தருணத்தில் நான் செய்த குறைபாடுகள், பாவங்கள், இறைவனை மறந்து கழித்த நேரங்கள் மற்றும் வேண்டுமென்றே செய்த பாவங்கள் யாவையும் நினைத்து  நான் மிக மனஉளைச்சல் மற்றும் அச்சத்தின் நிலையில் ஆகிவிட்டேன் ஏனெனில் இத்தருணம் பயமுறுத்தக் கூடிய, பீதியை ஏற்படுத்தக்கூடியது ஆகும்,
கப்ருஸ்தானை அடைந்த போது பலரின் சப்தங்களும் காதில் விழுந்தது, இங்கே அடக்குங்கள், அங்கே அடக்குங்கள் என்பதோடு, இன்னும் ப்ளீஸ் சற்று கப்ரை விரிவு படுத்துங்கள் என்றெல்லாம் சப்தம் காதில் விழுந்தது, யா அல்லாஹ்! நான் உயிரோடு கேட்;காததெல்லாம் என் மரணத்திற்குப்பின் கேட்கிறேனே!! அவர்களுக்கே தெரியாமல் என்னை கப்ரிலே உடல் மற்றும் உயிருடனேயே நுழைத்து விட்டனர் ஆனால் அவர்கள் என் உடலை மாத்திரம்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

என்னை தூக்குபவர்கள்: பிஸ்மில்லாஹி வ அலா மில்ல(த்)தி ரசூலுல்லாஹி என உள்ளே வைத்து விட்டனர், கற்களை மண்ணோடு கலந்து அடுக்க ஆரம்பித்துவிட்டனர், வேகமாக சப்தமிட நினைத்தேன் : என்னை மட்டும் தனியாக விட்டுச் செல்லாதீர்கள், அல்லாஹ் என்னை என்ன செய்வான் என எனக்குத் தெரியாது, அதே வேலையில்: நிச்சயமாக என்னை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்ற நம்பிக்கையும் என் மனதில் வந்தது.
அதன்பின்னர் என் மீது மண்ணைத் தள்ளினார்கள், இருள் சூழ்ந்து விட்டது, மக்களின்  சப்தங்களெல்லாம் ஓய்ந்து விட்டது ஆனால் அவர்கள் நடக்கின்ற மற்றும் அவர்களின் காலணிகளின் ஓசைகள் தெளிவாக கேட்க ஆரம்பித்து விட்டது, சிலர்கள் எனக்காக துஆ செய்வதை செவியுற்றேன்,
அவர்களின் துஆ, அதில் சிலர் குறிப்பாக : இவருக்காக ஸ்திரத்தன்மையைக் கேளுங்கள் ஏனெனில் அவரிடம் இப்பொழுதுதான் கேள்வி கேட்கப்படும் என சொன்னது எனக்கு ஒரு பிரியத்தையும் என் உள்ளத்திற்கு ஒரு விஸ்தீரணத்தையும் கொடுத்தது, திடீரென கப்ர் என்னை நெருக்கியது, என் முழு உடலையும் அழுத்துவதாக உணர்ந்தேன், மிகவும் அச்சமடைந்தேன், வேகமான குரலால் அலறினேன், பின்னர் கப்ர் முன்பிருந்தது போல விரிந்து கொடுத்தது, நான் வலது இடது புறமாக இனிமேல் நடக்கப் போவதை எதிர்ப்பார்த்து அச்சத்துடன் அங்குமிங்கும் பார்த்தேன்,

திடீரென பயங்கரமான தோற்றங்களையுடைய கருநிற உடல்களைக் கொண்ட இரு வானவர்கள் தோன்றினார்கள், அவர்களின் கண்கள் நீல நிறமாக இருந்தன, அவை மின்னல் போன்று மின்ன ஆரம்பித்தன, அவர்களது கோரைப்பற்கள் பூமியின் அடிப்பாகம் வரை சென்றடையும், அவர்களிடம் ஒரு சுத்தியல் (சம்மட்டி) இருந்தது அதன் மூலம் ஒரு முழு நகரத்தைக்கூட அடித்தாலும் அந்நகரமே தூள்தூளாகிவிடும் போலிருந்தது,
இருவரில் ஒருவர் உடனே: எழுந்து உட்காருமாறு சொன்னார், உடனே நான் எழுந்து அமர்ந்தேன், உடனே அவர் : உனது ரப் யார்? எனக் கேட்டனர்,
நான் : என் ரப்பு அல்லாஹ் என பயந்து கொண்டே சொன்னேன், இது பதிலளிக்க முடியாமையின் காரணமாக இல்லை மாறாக அவ்வானவர்களின் தோற்றம் மற்றும் அவர்கள் வினாத்தொடுக்கும் விதம் என்னை பயமுறுத்தியது,
அவர்கள் : உனது நபி யார்? எனக் கேட்டனர்,
நான் : முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் என்றேன்,
அவர்கள் : உன் மார்க்கம் எது? என்றனர்
நான் : இஸ்லாம் என்றேன்

அவ்விருவரும் : இப்பொழுது நீ கப்ரின் வேதனையைவிட்டு காப்பாற்றப்பட்டு விட்டாய் என்றனர்;
நான் : நீங்கள் இருவரும் தான் ''முன்கர் இன்னும் நகீரா? என்றேன் அவ்விருவர்: ஆம், நீ சரிவர பதில் தராமல் இருந்திருந்தால் இந்த சுத்தியல் (சம்மட்டி) மூலம் அடிப்போம் அதன் சப்தத்தை மனிதன் மற்றும் ஜின் இனத்தைத்தவிர உலகில் உள்ள அனைத்து படைப்பினங்களும் செவியுறுவார்கள், நீ அந்த கடுமையான சப்தத்தை வெளிப்படுத்தியதன்காரணமாக மயங்கி விழுந்து விடுவாய் மேலும் 70 முழம் பூமியின் உள்ளே நுழைந்துவிடுவாய் என்றனர்
நான் : இதைவிட்டு காப்பாற்றிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் மேலும் இதுவும் அல்லாஹ்வின் அருளால் மட்டுமே என்றேன்,
பின்னர் இருவரும் திரும்பிச்சென்று விட்டனர், அவர்களோடு நான் ரொம்ப பேச விரும்பவில்லை, அவர்கள் திரும்பி சென்ற பிறகுதான் நான் நிம்மதியடைந்தேன்,
அவர்கள் திரும்பி சென்ற பிறகு ஒரு அபூர்வமான உஷ்ணத்தை உணர்ந்தேன், எனது உடல் உள்ளே எரிச்சல் ஏற்பட்டது, கடுமையான எரிச்சலின் காரணமாக நரகத்தின் ஜன்னலில் ஒன்று திறக்கப்பட்டுவிட்டதாக அச்சம் ஏற்பட்டுவிட்டது ஆனால் அது என் உடம்பிலிருந்து வெளிவரும் உஷ்ணம்தான் என்பதை உணர்ந்தேன்;.
அதன்பின் வேறு  இரண்டு வானவர்கள்  என்னிடம் வருகை தந்தார்கள் இருவரும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றனர்,
நான் : வ அலைக்குமுஸ்ஸஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றேன்,
அவ்விருவர்: நாங்கள் வானவர்கள்,; கப்ரில் உனது அமல்களை சமர்ப்பிப்பிப்பதற்காகவும், கியாம நாளுக்கு வழிநடத்திச் செல்லக்கூடிய நன்மைகளை கணக்கிட்டுச் சொல்வதற்காகவும் வந்திருக்கிறோம் என்றனர்,

நான் :; மரணித்ததிலிருந்து ஒரு வித அச்சுறுத்தக்கூடிய ஒன்றை பார்க்கிறேன், இவ்வளவு கஷ;டம் மற்றும் துன்பத்தை எதிர்பார்க்கவே இல்லை ஆனால் நான் உங்களிடம் ஒன்று கேட்க என்னை அனுமதிப்பீர்களா? என அவ்விருவரிடம் கேட்டேன்,
அவ்விருவரும் : ஆம் என்றனர்,
நான் : நான் சுவர்க்கவாசிகளில் உள்ளவனா? இவ்வளவு நடந்த பிறகும் இங்கே நான் நரகத்திற்கு செல்லும் அளவுக்கு ஏதாவது அபாயம் இருக்கின்றனதா? என்றேன்
அவ்விருவரும் : நீ முஸ்லிம், உனக்கு கிடைக்கும் யாவும் முஸ்லிம் என்ற அடிப்படையிலேதான் ஏனெனில் நீ அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொண்டுள்ளாய், அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொண்டும் ஈமான் கொண்டுள்ளாய் ஆனால் நீ சுவர்க்கத்தில் நுழைவதும் நரகில் நுழைவதும் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும், அல்லாஹ் உன்னை நரகில் நுழைய வைத்தாலும் அல்லாஹ் நாடினால் நீ நரகில் நிரந்தரமாக இருக்க மாட்டாய் என்பதை நம்பு ஏனெனில் நீ ஒரே இறைவனை நம்பியவன் என்றனர்,
நான் : அழுதேன் மேலும் எத்தனை காலங்கள் நரகில் நான் தங்கியிருப்பேனோ!! என்றேன்,
அவ்விருவரும் : உன் ரப்பை நம்பு மேலும் அவன் மிக சங்கையாளன் என்றனர்,
இப்பொழுது நாம் நீ பருவ வயதை அடைந்தது முதல் விபத்தில் மரணித்தது வரையுள்ள உன் அமல்களை சமர்ப்பிக்க துவங்குகிறோம், அவர்கள் துவக்கினார்கள் அவர்கள் சொன்ன வார்த்தைகள் மிக அபூர்வமாகவே இருந்தது, அவை:

நாங்கள் உன் தொழுகையைக் கொண்டே துவக்குவோம் ஏனெனில் முஸ்லிமிற்கும் முஸ்லிமல்லாதவனுக்குமிடையில் வேறுபாட்டைக் காண்பிக்கக்கூடிய உடன்பாடு இதுவே ஆனால்  உனது நல்லமல்களில் ஒன்று கூட உயர்த்தப்படாது மேலும் எந்த நல்ல அமல்களும் இங்கிருந்து கடந்து மேலே போகாது ஏனெனில் உன்னால் கடந்த காலத்தில் செய்த எல்லா நல்லமல்களும் தொங்கிங் கொண்டிருக்கிறன என்றனர்.
நான்: நான் உயிரோடு இருக்கக்கூடிய காலத்தில் செய்த அமல்கள் நிறுத்தி வைக்கப்பட காரணம் என்ன? ஏன்? பூமியில் உள்ள உஷ்ணங்கள் யாவும்; வந்து சேர்ந்தது போல என் உடலில் ஒரு எரிச்சல் ஏற்படுவதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா என ஆச்சரியத்தோடு கேட்டேன்
அவ்விருவர் : ஆம் இதற்குத் தொடர்பு உள்ளது, உன் கடன்களை செலுத்துவதில் பொடுபோக்காக இருந்தாய், உன் மரணத்திற்கு முன் அதை செலுத்தவில்லை, இப்பொழுது மிக அபாயமான கட்டத்தில் இருக்கிறாய் அல்லவா?
நான் :  அழுதவாறே சொல்ல ஆரம்பித்தேன் ஏன்?
அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர்  இவ்வளவு வேகமாக என் உடலில் எரிச்சலுக்கு காரணம் கடனா?

என் வினாத்தொடுத்தலை ஏதோ ஒன்று நிறுத்தியது, கப்ரின் இருளுக்கு ஆதரவு தரக்கூடிய ஒரு பிரகாசிக்கின்ற ஒளி ஆகாயத்திலிருந்து தென்பட்டது, அதற்கு ஒரு ஓசை இருந்தது, அதிலிருந்து சுத்தமான நறுமணம் வந்தது, அது போல உயிருடன் இருக்கும் போதோ அல்லது மரணத்திற்கு பிறகோ நுகர்ந்ததில்லை,
அவ்வொளி சொன்னது : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
நான் : வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்றபின் நீங்கள் யார்? என்றேன்
அவ்வொளி : நான் தான் சூரா அல்-முல்க் (தபாரக்), நான் உனக்கு ஆதரவு தருவதற்கும், உனக்காக அல்லாஹ்விடம் வாதாடுவதற்கும் வந்துள்ளேன் ஏனெனில் நீ என்னை மனனம் செய்திருந்தாய், உங்களது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்; : என்னை மனனம் செய்த யாவரையும் அவர்களை காப்பாற்றுவதற்காக நான் வாதாடுவேன் (திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா) என உங்களுக்கு சொல்லித்தந்துள்ளார்கள்.
 நான் : வருக! வருக! நான் சிறுபிராயத்திலிருந்து உன்னை மனனம் செய்து, தொழுகையிலும் எனது வீட்டிலும் ஓதி வந்தேன், இப்பொழுது நான் மிகத் தேவையுடையவனாக உள்ளேன் என்றேன்.
அவ்வொளி (சூரா அல் முல்க்): ஆம், இதோ உன்னுடன் இருக்கிறேன், அல்லாஹ்விடம் உன் பிரச்சினையை தீர்ப்பதற்காக அல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுப்பேன் ஏனெனில் உனது உடலில் எரிச்சலுக்கும், உனது அமல்கள் நிறுத்தி வைக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த கடன் விஷயத்தில் பொடுபோக்காக இருந்துவிட்டாய் என்றது (அவ்வொளி),

நான் : ஜெயம் பெறுவதற்கு வழி என்ன? என  கேட்டேன்,
அவ்வொளி: மூன்று விஷயங்களில் ஒன்றைக் கொண்டு என்றது
நான் : வேகமாக அவை யாவை? என்றேன்
அவ்வொளி (சூரா அல் முல்க்) என்னிடம் : உனக்கு ஜெயம் பெறுவதற்கான வழியைக் கூறுவதற்கு முன், இக்கடனை செலுத்துவதற்காக உன் வாரிசு (சொத்தை பங்கிட்டுக் கொள்பவர்)களுக்கு இக்கடனைப்பற்றி எழுதி வைத்துள்ளாயா? என எனக்கு சொல்ல வேண்டும் என்றது,
வாரிசுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடனே இவ்வார்த்தை என் மனதிற்கு ரொம்ப கஷ;டத்தை ஏற்படுத்தியது, என் கண்கள் கண்ணீர் விட்டன, என் தாய்தந்தையர்கள், மனைவி மக்கள், சகோதரிகள் போன்ற அனைத்து குடும்பத்தினர்களின் ஞாபகம் வந்துவிட்டது, என் மரணத்திற்குப் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எப்படி இருக்கின்றனர், என் மகள் சாரா, அவளது சகோதரர்கள் யாவரும் மனநிலை உடைந்து போயிருப்பார்களே அவர்களெல்லாம் அனாதைகளாகி இருப்பார்களே! எனக்குப்பின் அவர்களை, அவர்களின் விஷயத்தை கண்காணிப்பவர்கள் யார்? என் சிறிய மகள் : என்னிடம் சாக்லட் வாங்கி வர சொன்னாளே! என்னைப்பற்றி கேட்டிருப்பாளே? அவளுக்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள், அவளது மனநிலை என் மரணத்திற்குப் பின்னர் என்னவாகியிருக்கும்,

என் மனைவி எனக்குப்பின்னர் என்ன செய்திருப்பாள்! அவளை விதவை என்றல்லவா சொல்வார்கள், எனக்குப்பின் என் குழந்தைகளின் சுமையை எவ்வாறு சுமக்கப்போகிறாள், ஒவ்வொன்றாக ஞாபகம் வர ஆரம்பித்து என் கண்ணீர் வழிந்தோடியது, தேம்புதல் அதிகரித்துக் கொண்டே போனது,
சூரா அல்-முல்க் : எதையும் நினைத்து விட்டாயா? எனக் கேட்டது
நான்: ஆம்!! எனது குடும்பத்தினர், என் குழந்தைகளைப்பற்றி, எனக்குப்பின்னர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றித்தான் நினைத்தேன்,
சூரா அல்-முல்க் : அவர்களுக்கு அல்லாஹ் இருக்கிறான், அல்லாஹ் அவர்களை படைத்தான், அவர்களுக்கு உணவளிப்பான், அவர்களுக்கு அல்லாஹ் பொறுப்புதாரியாக இருக்கிறான் என சொன்னது.
இந்த வார்த்தைகள் எனக்கு தாகித்தவருக்கு குளிர்ந்த நீர் புகட்டியது போல இருந்தது, நான் மனதிலே : அவர்களுக்கு அல்லாஹ் இருக்கும்போது நான் ஏன் கவலைப்படவேண்டும் என சொல்லிக் கொண்டேன்.

என் கவலை சற்று கலைந்தது இருப்பினும் என் உடல் எரிச்சல் பற்றிய கவலை குறையவில்லை,
நான் : உடனே சூரா அல்-முல்கிடம் : நான் கொடுக்க வேண்டிய கடன் எவ்வளவு என நான் தெரிந்து கொள்ள முடியுமா என கேட்டேன்
சூரா அல்-முல்க் : ஆம், நான் வானவரிடம் இதுபற்றி விசாரித்தேன் அதற்கு அந்த மலக்கு : 17000 ரூபாய் என்றார், பத்தாயிரம் உனது தோழர் அபு ஹசனிடமிருந்து பெற்றது ஆகும் மற்ற 7000 என்பது கொஞ்சம் கொஞ்சமாக பெற்றது என்றது,
நான் : ஆச்சரியத்தோடு அது எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பெற்றது என கேட்டேன்!!
சூரா அல்-முல்க் : நீ பருவமடைந்தது முதல் கடனை செலுத்தும் விஷயத்தில் பொடுபோக்காக இருந்தாய் எனவே அது ஒன்று சேர்ந்து விட்டது என்றது

நான் : யாருக்கு கொடுக்க வேண்டும் என கேட்டேன்
சூரா அல்-முல்க் : நீ 15 வயதாக இருக்கும் போது, மளிகைக் கடைக்காரரிடம் 50 ரூபாய்க்கு உணவுப் பொருள் வாங்கினாய், பணம் உன்னிடம் இல்லை, நாளை வந்து தருகிறேன் என வந்துவிட்டாய் (அதை கொடுக்கவில்லை)
மற்றொன்று : லாண்டரி கடையில் உனது துணியை கழுவியபிறகு மேலே சொன்னது மாதிரியே சொல்லி விட்டு வந்தாய், அதையும் கவனிக்காமல் மறந்து விட்டாய்,
அதே மாதிரி இந்த கடை, இன்னும் ஒரு கடை அப்படியே கணக்கிட்டுக்கொண்டே ஒன்றன் பின் ஒன்றாக சொல்லி முடித்து : கடனை செலுத்தும் விஷயத்தில் பொடு போக்காகவும் அதை அலட்சியமாகவும் கருதுவதன் காரணமாக அது பலருக்கு அவர்களுடைய கப்ரில் மோசமான நிலையை ஏற்படுத்துகிறது என அந்த சூரா சொன்னது.
உங்களுக்கு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் கடனின் விஷயத்தில் எச்சரிக்கவில்லையா? ஒரு ஷஹீதின் மதிப்பு எவ்வளவுதான் உயர்வாக இருந்தாலும் கடனின் காரணமாக அவரின் அமல்களும் நிறுத்தி வைக்கப்பட்டுவிடுகின்றன என்பதை உங்களுக்கு நபியவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள், ஒரு நபித்தோழரின் சிறப்பு எவ்வளவு என உனக்குத் தெரியாதா? அவர்களுக்கு கூட அவர்களின் கடனை செலுத்தி முடிக்காமல் அவர்களுக்;காக நம்மால் ஏதும் செய்ய முடியாது என்ற நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளது என அந்த சூரா சொன்னது.
நான் : பயந்தவாறே இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் என சொல்லிக்கொண்டே, இதைவிட்டு விடுதலை பெற என்ன செய்ய வேண்டும், எனது உடல் எரிச்சல் மற்றும் வலியினால் துண்டுதுண்டாகிறது எனச் சொன்னேன்,

சூரா அல்-முல்க் : மூன்று விஷயங்களைக் கொண்டு என்றது நான் : அவசரமாக அவை யாவை? என்றேன்
சூரா அல்-முல்க் : கடன் கொடுத்தவர்கள் (உன் கடனை திரும்ப பெறுவதை விட்டு) உன்னை மன்னிக்க வேண்டும்
நான் : அதில் பலர் நான் மறந்தது போல அவர்களும் மறந்து விட்டார்கள், நான் இறந்தது கூட அவர்களுக்கு தெரியாது, அவர்களில் பலர் என்னைக்கூட அறிய மாட்டார்கள் மேலும் மறந்திருப்பார்கள் இருப்பினும் அடுத்தது என்ன? என்றேன்
சூரா அல்-முல்க் : உன் சார்பில் உனது வாரிசுகள் அதை செலுத்தி முடிக்க வேண்டும்,
நான் : மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய கடனைப்பற்றி நான் எழுதி வைக்கவில்லை, எனது பிரச்சினையையும் என் கடனைப்பற்றியும் எவ்வாறு அவர்கள் தெரிந்து கொள்வார்கள?; மரணம் திடீரென வந்துவிட்டது, நான் எதிர்பார்க்கவில்லை அல்லது எவ்வாறு அதை கணக்கிட்டுக் கொடுப்பது என கேட்டேன்
சூரா அல்-முல்க் : ஒரு விஷயம் மட்டும் எஞ்சி இருக்கிறது, நான் உனக்காக முயற்சிக்கிறேன் அதுவே உனது விடுதலைக்கான காரணமாகவும் இருக்கும், சிறிது நேரம் கழித்து வருகிறேன் இன்ஷா அல்லாஹ், இப்பொழுது நான் திரும்பி செல்கிறேன் என்றது,
நான் :  ப்ளீஸ்!! போகவேண்டாம், கடுமையான தனிமையையும், அச்சத்தையும், இருளையும், என் உடலில் எரிச்சல் அதிகமாவதையும் உணர்கிறேன்,
சூரா அல்-முல்க் : நான் ரொம்ப விலகிப்போகவில்லை, உனக்காக வாதாடவும் ஒரு வழியைத் தேடவுமே செல்கிறேன், அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உனக்கு விடுதலை கிடைக்கும் என சொல்லிவிட்டு போய்விட்டது.

நான்: இருளின் பயங்கரத்தோடும், நடந்த மற்றும் நடக்கவிருக்க விஷயங்களைப் பற்றி கவலை கொண்டவாறே தனிமையில் இருந்தேன், திடீரென என் மனதில் ஒரு துஆ தோன்றியது அது: ياَ مَنْ لاَ يَأْنَسْ بِشَئٍ أَبْقَاهُ ، ولاَ يَسْتَوْحِشْ مِنْ شئٍ أَفْنَاهُ ، وَيَا أَنِيْسَ كُلِّ غرِيْبً ، اِرْحَمْ فِيْ القَبْرِ غُرْبتيِ ، وَيَا ثَانِي كُلّ وَحِيْدٍ ، آنِسْ فِيْ القَبْرِ وَحْدَتِيْ
(யா மன் லா யாஃனஸ் பி-ஷையின் அப்(க்)காஹு, வ லா யஸ்தொவ்ஹிஷ் மின் ஷையின் அஃப்னாஹு, வ யா அனீஸ குல்லி ஙரீப், இர்ஹம் ஃபில் கப்ரி ங{ர்பத்தீ, வ யா ஸானிய குல்லு வஹீத், ஆனிஸ் ஃபில் கப்ரி வஹ்தத்தீ)
நிலையாக வைத்துள்ள அனைத்திலும் மனதிருப்தியைத் தராதவனே! தன்னால் அழிக்கப்படுகிற எல்லாவற்றிலும் பீதியை ஏற்படுத்தாதவனே! தனிமையில் இருக்கும் யாவரையும் அன்போடு அரவணைப்பவனே! கப்ரின் தனிமையில் என்மீது இரக்கப்படுவாயாக! தனிமையில் இருக்கும் ஒவ்வொருடனும் (கூட) இரண்டாவதாக இருப்பவனே! என் கப்ரின் தனிமையில் எனக்கு ஆதரவளிப்பாயாக!
என்பதை சொல்ல ஆரம்பித்தேன் இருப்பினும் கணக்குக் கேட்கப்படுகிற உலகத்தில்தான் இருக்கிறேன் இங்கே செயலுக்கு மதிப்பில்லை என்பது ஞாபகத்தில் வந்தது.
சில நொடிகளில் அறிமுகமான எனது அன்பிற்குரிய தந்தையின் குரலைக் கேட்டேன் மேலும் அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என சொல்வதையும் செவியுற்றேன்.

நான்: ஆர்வத்தோடு : வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹுஎன்றும் வருக! என் தந்தையே! நான் சொல்வதை நீங்கள் நிச்சயம் செவியுறமாட்டீர்கள் என்றும்  மனதில சொல்லிக் கொண்டேன்
பின்னர் அவர்கள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக, இவரின் மீது இரக்கப்படுவாயாக! இவரது நுழைந்த இடத்தை விஸ்தீரணப்படுத்துவாயாக, அவரது தனிமையில் ஆதரவளிப்பாயாக! என தேமி அழ ஆரம்பித்தார்கள்,
அதன் பின் அவர்கள் சொல்ல செவியுற்றேன் : அவருக்காக எல்லாவற்றையும் நான் விட்டுக் கொடுக்கிறேன் (ஹலாலாக்குகிறேன்), நான் அவரைப் பொருந்திக் கொண்டேன், நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக! என சொல்லிவிட்டு என் தந்தை திரும்பி சென்று விட்டார்கள்.
என்னுடைய கப்ர் பிரகாசித்துக்கொண்டே இருந்தது, என்பக்கம் வானவர் திரும்பி : உனது தந்தையின் துஆ இறுதி வானம் வரை மிகவும் வல்லமைவாய்ந்த உயர்ந்தவனின் அனுமதியோடு கொண்டு செல்லப்படும் விரைவில் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான் ஏனெனில் தந்தையின் துஆ தன் மகனுக்காக ஏற்றுக் கொள்ளப்படும் (திர்மிதி-1905) என (அம் மலக்கு) சொன்னார்.
அல்லாஹ்வே! என் தந்தை இங்கு நின்று இன்னும்; சில நேரங்கள் துஆவை நீட்டியிருந்தால் நலமாக இருக்குமே! என சில வேலைகளில் ஆசித்தேன் ஏனெனில் அவரது துஆவின்  பிரதிபலிப்பை நான் என்னுடைய கப்ரில் குறிப்பாக என்மீதே உணர்ந்தேன்.

நான் : ஒரு வினாத்தொடுக்கலாமா? என அந்த வானவரிடம் கேட்டேன்
அம்மலக்கு : அது என்ன ? என்றார்
நான் : நான் இறந்து எத்தனை தினங்கள் ஆகிவிட்டன, இப்பொழுது நேரம் என்ன? என்றேன்
அம்மலக்கு : நீ இறந்து 3 தினங்கள் ஆகிவிட்டன, இப்பொழுது லுஹர் தொழுகை நேரம்.
நான்: ஆச்சரியத்தோடு சுப்ஹானல்லாஹ்! இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இக்குறுகிய காலத்தில் நடந்துவிட்டதா? என கேட்டேன்   நாம் மதிய நேரத்தில் இருந்தும் என் கப்ரில் இவ்வளவு இருளா!! ஏன்ற ஆச்சர்யம்.
வானவர்: இன்னும் நெடுந்தூரம் உனக்கு முன் இருக்கிறது அல்லாஹ் உனக்கு உதவுவானாக! என வானவர் சொன்னார்,
என்னால் தன்னைத்தானே அடக்க முடியவில்லை அழுதேன் அழுதேன் என்வாழ்விலே அவ்வாறு அழுததாக நினைவில்லை, சுப்ஹானல்லாஹ்! இதுபோன்ற விஷயத்தில் எவ்வாறு மறந்து இருந்துவிட்டேனே என என் மனதிலேயே சொல்லிக்கொண்டேன்,
உன் தந்தையின் துஆவின் சிறப்பால் உனது கப்ர் இறைவன் நாடுகின்றவரை பிரகாசத்தோடு இருக்கும் என சொல்லியவாறு வானவர்; திரும்பிச் சென்றுவிட்டார்,

தொடரும்...

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்